தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 3000 கனஅடியாக அதிகரிப்பு

27th Nov 2021 10:01 AM

ADVERTISEMENT


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடியாக உபரிநீர் திறப்பு வெளியேற்றப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அதில், சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் நிலைகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 80 சதவிகிதத்திற்கு மேல் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

இதையும் படிக்க | சென்னை, 6 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியும், 3645 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 6,000 கன அடியாக உள்ளதால் 2000 கன அடியில் இருந்து 3,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

 

Tags : sembarambakkamlake Overflow செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT