தமிழ்நாடு

ஆலங்குளத்தில் ஜவுளி வியாபாரி மர்மச்சாவு

27th Nov 2021 11:01 AM

ADVERTISEMENT


ஆலங்குளம்: ஆலங்குளத்தில் ஜவுளி வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன்(36). பைக்கில் சென்று ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். அவர் வியாழக்கிழமை இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இதையும் படிக்க | சென்னை, 6 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை அவர் ஆலங்குளம் மெயின் ரோடு ஊர் மடை அருகில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. 

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த ஆலங்குளம் போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்கமீண்டும் மழை வெள்ளம்: மிதக்கிறது சென்னை

அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : textile merchant Killed Alangulam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT