தமிழ்நாடு

புதுச்சேரியில் திடீர் வெடி விபத்து: வீட்டிலிருந்து 8 பேர் காயம்

27th Nov 2021 10:26 AM

ADVERTISEMENT


புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டில் சனிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் வீட்டிலிருந்து 8 பேர் காயமடைந்தனர். 

புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜோதி. இவர்களது வீட்டில் சனிக்கிழமை காலை 6:30  மணி அளவில்  திடீரென வெடி சத்தத்துடன் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதையும் படிக்க | தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியது சீரம் நிறுவனம்

வெடி விபத்தில் வீட்டிலிருந்த சீனிவாசன், ஜோதி, மகள் எழிலரசி மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோர் காயமடைந்தனர்.

ADVERTISEMENT

மேலும் வீட்டின் அருகே இருந்த அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேர் என எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இதில், பலத்த காயங்களுடன் சீனிவாசன் உள்ளிட்ட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து குறித்து தகவலறிந்த முத்தியால்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க குடும்ப அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்து: பிரதமா் நரேந்திர மோடி

நாட்டு வெடி ஏதேனும் வெடித்ததா? என்ன நடந்தது என தெரியாத நிலையில், விபத்து தொடர்பாக மர்மம் நீடிப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : blast புதுச்சேரி 8 பேர் காயம் வெடி விபத்து
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT