தமிழ்நாடு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை

26th Nov 2021 10:22 AM

ADVERTISEMENT


சிதம்பரம்: கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஞானதேவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் கடலூர் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து இன்று வெள்ளிக்கிழமையும் மழை பெய்து வருகிறது. 


இதையும் படிக்க | கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

எனவே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (நவ.26) விடுமுறை அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழக அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : கனமழை holiday heavyrain Annamalai University
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT