தமிழ்நாடு

கோவில்பட்டி அருகே மின்கம்பத்தில் கார் மோதல்:  2 பேர் பலி; 2 பேர் காயம்

26th Nov 2021 09:27 AM

ADVERTISEMENTகோவில்பட்டி அருகே சாலையின் ஓரம் இருந்த மின்கம்பத்தில் காரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். 

மதுரை மற்றும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் மதுரை மெஜிரா கோட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி செல்வதற்காக மதுரையை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவனம் ஒப்பந்த்தின் அடிப்படையில் வாகனங்களை இயங்கி வருகிறது. 

இதையும் படிக்க | 

இந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றும் மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த ஹரி என்பவர் நேற்றிரவு தனது நண்பர்கள் முருகன், ரகுநாதன் மற்றும் கோபால் ஆகியோருடன் அம்பையில் இயங்கி வரும் தான் பணிபுரியும் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை மேற்பார்வையிடுவதற்காக ஒரு காரில் சென்றுள்ளார். 

ADVERTISEMENT

காருக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்.

கார் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இடைச்செவல் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் அதிவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம்  போல் நெருங்கியது மட்டுமின்றி, மின்கம்பமும் முற்றிலுமாக சரிந்து கிழே விழுந்தது. 

கார் விபத்துக்குள்ளானதை பார்த்த அப்பகுதி மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். கோவில்பட்டி டி.எஸ்.பி.உதயசூரியன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று காரில் இருந்தவர்களை மீட்க முயற்சி எடுத்தனர். கார் மீது மின் வயர்கள் விழுந்து கிடந்தால் மின்சார வாரிய ஊழியர்கள் உதவியுடன் அப்பகுதியில் மின்சாரத்தினை தடை செய்து பின்னர் மின் வயர்களை அகற்றினர். 

காருக்குள் காயங்களுடன் உயிருக்கும் போராடுபவர்களை மீட்கும் தீயணைப்பு வீரர்கள். 

இதையடுத்து காரில் சிக்கி இருந்தவர்களை தீயணைப்புதுறையினர் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். முதலில் காயமடைந்து காரில்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹரி(44) மற்றும் ரகுநாதன் (39) ஆகிய 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் காருக்குள் சிக்கி உயிரிழந்திருந்த மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த கோபால்(40), முருகன் (54) ஆகிய 2 பேரையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். 

உயிரிழந்த 2 பேரின் உடல்களும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : விபத்து 2 பேர் பலி 2 பேர் காயம் Car collision Kovilpatti 2 killed 2 injured
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT