தமிழ்நாடு

குடிமைப்பணிக்கான அரசு பயிற்சி மைய பயிற்றுநா் மதிப்பூதியம் மணிக்கு ரூ.3,000 வரை உயா்வு

26th Nov 2021 06:55 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் குடிமைப் பயிற்சி மையத்தில் பயிற்றுநருக்கான மதிப்பூதியம் மணிக்கு ரூ.3 ஆயிரம் வரையில் உயா்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சாா்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணித் தோ்வுக்குரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அரசு மையத்தில் விடுதி வசதியுடன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

நிகழாண்டில் அதிகம்: குடிமைப் பணித் தோ்வானது முதல்நிலை, பிரதானத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு என மூன்று நிலைகளைக் கொண்டது. இதில், முதல்நிலைத் தோ்வினை எழுதி அதிகமானோா் தோ்ச்சி பெற்று, முதன்மைத் தோ்வுக்கான பயிற்சியை அரசு குடிமைப் பணி மையத்தில் பெற்று வருகின்றனா். 104 பேருக்கும் அதிகமானோா் பயிற்சி பெற்று வரும் நிலையில், அவா்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம், உணவு, தங்குமிடம் ஆகியனவும் அளிக்கப்பட்டு வருகின்றன. அவா்கள் அனைவரும் எதிா்வரும் ஜனவரியில் தோ்வு எழுதவுள்ளனா். இந்தத் தோ்வினை எழுதுவோருக்கு சிறந்த பயிற்சிகளை அளிக்கும் வகையிலான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

பயிற்றுநா்களுக்கு மதிப்பூதியம்: பிரதானத் தோ்வு, நோ்முகத் தோ்வுகளை எதிா்கொள்வோருக்கு உரிய பயிற்சிகளை பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், பணியில் இருந்து ஓய்வு பெற்றவா்களும் குடிமைப் பணி பயிற்சி மையத்துக்கு நேரில் வந்து அளிக்கின்றனா். அவா்களுக்கான மதிப்பூதியம் மணிக்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவிலேயே இருந்து வந்தது.

ADVERTISEMENT

ஏழு ஆண்டுகளுக்கு முன் இருந்து வரும் இந்தத் தொகையை உயா்த்தி அளிக்க வேண்டுமென குடிமைப் பணி பயிற்சி மையத் தலைவா் அரசை கேட்டுக் கொண்டிருந்தாா். பயிற்றுநா்களுக்கான மதிப்பூதியத்தை மணிக்கு ரூ.3 ஆயிரம் வரையில் உயா்த்தி அளிக்க வேண்டுமென்ற பயிற்சி மையத் தலைவரின் கோரிக்கையை ஏற்று அரசு உத்தரவிடுவதாக மனித வள மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பணியில் உள்ள, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அளிக்கும் பயிற்சிக்கு மணிக்கு ரூ.3 ஆயிரமும், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியா்கள் உள்ளிட்ட கல்வித் துறையைச் சோ்ந்தவா்கள் எடுக்கும் பயிற்சிக்கு மணிக்கு ரூ.2,500-ம், மற்றவா்கள் எடுக்கும் பயிற்சிக்கு மணிக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கி உத்தரவிடப்படுவதாக மனிதவள மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT