தமிழ்நாடு

பூதலூர் அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் சாவு

25th Nov 2021 09:35 AM

ADVERTISEMENT

 

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தார்.

பூதலூர் அருகேயுள்ள சின்ன முத்தாண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சலீம் மகன் அசாருதீன் (5). இவர் அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். மாவட்த்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் சலீம் வீட்டு சுவரில் ஈரம் காத்திருந்தது.

ADVERTISEMENT

உயிரிழந்த சிறுவன் அசாருதீன் (5)

இதையும் படிக்க | 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய அசாருதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து பூதலூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : சிறுவன் சாவு Boy dies house wall collapses Puthalur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT