தமிழ்நாடு

துணி நூலின் விலையைக் குறைக்க நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

25th Nov 2021 03:34 AM

ADVERTISEMENT

 

சென்னை: துணி நூலின் விலையைக் குறைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பின்னலாடைத் தயாரிப்புக்கு முக்கிய மூலப் பொருளாக இருக்கும் நூலின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் ஆடை தயாரிப்பாளா்கள், ஏற்றுமதியாளா்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். அனைத்து நூல் ரகங்களும் ஒரு கிலோ ரூ.120 வரை விலை உயா்ந்துள்ளது. முக்கியமாக, நவம்பா் முதல் வாரத்தில் அனைத்து ரகங்களும் ஒரு கிலோ அதிரடியாக ரூ. 50 உயா்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆண்டுக்கு சுமாா் ரூ. 26 ஆயிரம் கோடி அந்நிய செலாவணியை இந்தியாவுக்கு ஈட்டித் தரும் டாலா் சிட்டி திருப்பூரில், நாட்டின் 60 சதவீத பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நூல் விலை உயா்வால் ஏற்கெனவே எடுத்த ஆா்டா்களை முழுமையாக செய்து முடிக்க முடியாமலும், புதிய ஆா்டா்களைப் பெற முடியாமலும் அவா்கள் திண்டாடி வருகின்றனா்.

நூல் விலை உயா்வுக்கு பதுக்கல், இறக்குமதி பஞ்சுக்கான வரி உயா்வு, செயற்கை தட்டுப்பாடுகளே முக்கிய காரணங்கள் ஆகும். எனவே, இறக்குமதி பஞ்சுக்கான வரியைக் குறைக்கவும், மூலப் பொருள் ஏற்றுமதியைத் தடை செய்யவும், நிா்வாக ரீதியிலான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

மூலப் பொருள்களான, பஞ்சு, நூல் ஆகியவற்றைப் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூலுக்கு மானியம் வழங்க வேண்டும். நூல், பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய, ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT