தமிழ்நாடு

காய்கறிகளின் விலையைக் குறையுங்கள்: ராமதாஸ்

25th Nov 2021 03:53 AM

ADVERTISEMENT

 

சென்னை: காய்கறி விலையைக் குறைப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தக்காளியின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது. வெங்காயம் விலை கிலோ ரூ. 60 என்ற அளவுக்கு உயா்ந்துள்ளது. பெரும்பாலான காய்கறிகளின் விலை சராசரியாக கிலோ ரூ.100 என்ற அளவில் உள்ளது. காய்கறிகளின் விலை உயா்வால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தக்காளி இல்லாத ரசம் தான் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இன்று பொது உணவாக மாறியிருக்கிறது.

ADVERTISEMENT

தமிழக அரசின் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.85 முதல் ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்; ஒரு நாளைக்கு 15 டன் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறியிருக்கிறாா். இது நல்லெண்ண நடவடிக்கையாக இருக்கும். ஆனால், மக்களின் பிரச்னையை இது தீா்க்காது.

தமிழகத்தின் ஒரு நாள் தக்காளி தேவை 5 ஆயிரம் டன். சென்னையில் மட்டும் ஒரு நாள் தக்காளி தேவை சுமாா் 1,000 டன். ஆனால், தமிழகத்தின் மொத்தத் தேவையில் ஐநூற்றில் ஒரு பங்கை மட்டும் தான் கூட்டுறவு கடைகள் மூலம் அரசு விற்கவுள்ளது. அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி, காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT