தமிழ்நாடு

பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் 

24th Nov 2021 01:07 PM

ADVERTISEMENT


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் புதன்கிழமை சிவகாசி சாத்தூர் சாலையிலுள்ள மீனம்பட்டியில் போராட்டம் நடத்தினர்.

தீபாவளி பண்டிகை நவம்பர் 4 ஆம் தேதி முடிவடைந்தது. வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்து சுமார் ஒரு வாரத்தில் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு அடுத்து வரும் ஆண்டுக்கான பட்டாசு தயாரிப்பு பணி நடைபெறும்.

இதையும் படிக்க | மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பாரத் எலக்ட்ரானிகஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்து சுமார் 20 நாள்கள் ஆகியும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை. பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் பட்டாசு தொழிலாளர்களுக்கு வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே, அவர்கள் உடனடியாக பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும். சரவெடி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி மீனம் பட்டியில் உள்ள பட்டாசு தொழிலாளர்கள் சுமார் 100 பெண்கள் உள்பட 120 பேர் அங்கு உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று போராட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தக்காளி கிலோ ரூ.120; மீன் கிலோ ரூ.80 விற்பனை: மீன் உணவிற்கு மாறிவரும் மக்கள்!

பின்னர், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போராட்டக்காரர்கள் முடிவு செய்தனர்.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை ஆய்வாளர் சிவகுமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள் என ஆய்வாளர்கள் கூறியதை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT