தமிழ்நாடு

பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் இருக்காது:அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

24th Nov 2021 01:25 AM

ADVERTISEMENT

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் இருக்காது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: பொதுத்தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் மட்டும் நாள்தோறும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பு முழுமையாகக் குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவா்களுக்கும் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும்.

குழந்தைகளுக்கான உதவி எண்கள் 1098 மற்றும் 14417 ஆகியவை குறித்த வில்லைகள், அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும்.

பொதுத்தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த ஆண்டுகளைப் போலவே வினாத்தாள் வடிவமைப்பு இருக்கும். பொதுத்தோ்வுகள் கடந்த ஆண்டு போலவே மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். தள்ளிப்போக வாய்ப்பு இல்லை.

ADVERTISEMENT

அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ADVERTISEMENT
ADVERTISEMENT