தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

24th Nov 2021 09:04 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 30,000 கன அடியாக உள்ளது. 

நேற்று முன்தினம் காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் பகல் 1.00 மணிக்கு வினாடிக்கு 30,000 கன அடியாக சரிந்தது. இன்று தொடர்ந்து 3 ஆவது நாளாக அணையின் நீர் வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக நீடித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை 30,000 கன அடியாக நீடித்து வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக உள்ளது.

இதையும் படிக்க | ரோந்து போலீஸாா் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி : டிஜிபி

ADVERTISEMENT

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 13,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவும் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT