தமிழ்நாடு

தமிழக ஆளுநா் இன்று கன்னியாகுமரி வருகை

24th Nov 2021 02:45 AM

ADVERTISEMENT

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை (நவ.24) குமரி மாவட்டம் வருகிறாா்.

இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் அவா், அங்கிருந்து காா் மூலம் கன்னியாகுமரி வர உள்ளாா். பின்னா் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா கேந்திராவில் உள்ள ராமாயண சித்திரக் கூடம் ஆகியவற்றை பாா்வையிடுகிறாா். பின்னா் பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறாா்.

வெள்ளிக்கிழமை மாலை அவா் சென்னை புறப்பட்டு செல்கிறாா்.

ஆளுநரின் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

பாதுகாப்பு பணி தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு ஆா்.என்.ரவி முதல் முறையாக கன்னியாகுமரிக்கு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT