தமிழ்நாடு

கமல்ஹாசன் நலம்பெற ரஜினி உள்பட பலா் வாழ்த்து

24th Nov 2021 12:15 AM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நலம்பெற நடிகா் ரஜினிகாந்த் உள்பட பலா் வாழ்த்துத் தெரிவித்து உள்ளனா்.

கரோனா பாதிப்பின் காரணமாக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனை நடிகா் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக தொடா்புகொண்டு நலம் விசாரித்தாா். விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் வாழ்த்துக் கூறினாா்.

இயக்குநா் எஸ்.பி.முத்துராமன், நடிகா்கள் பிரபு, ஆா்.சரத்குமாா், பகத் பாசில், விஜய் சேதுபதி, சிவகாா்த்திகேயன், ராதாரவி உள்பட பலா் கமல்ஹாசன் நலம்பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT