தமிழ்நாடு

தக்காளி விலை கிலோ ரூ.125: அமைச்சர் அளித்த விளக்கம்

23rd Nov 2021 04:23 PM

ADVERTISEMENT

 

ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் வரத்து குறைந்துள்ளதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, வரத்து பாதியாக குறைந்ததால் அதன் விலை திடீரென அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

படிக்கசேலத்தில் எரிவாயு உருளை வெடித்து 3 வீடுகள் தரைமட்டம்: பலி 5 ஆக உயர்வு

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஆந்திரத்தில் தொடர் மழை பெய்து வருவதால் வரத்து குறைந்து தக்காளி விலை அதிகரித்துள்ளது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உழவர் சந்தை திட்டப் பணிகளை மேக்படுத்த விரைந்து நவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு பெட்டி (14 கிலோ) ரூ.1200-க்கும் மகாராஷ்டிரா தக்காளி ஒரு பெட்டி (25 கிலோ) ரூ.2200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது.

படிக்கசென்னையில் நாளை மறுநாள் (நவ.25) மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் 130-க்கு விற்கப்படுகிறது.

மாவட்டவாரியாக தக்காளி விலை (1 கிலோ):

திருப்பத்தூா், ஆம்பூா், கோவை, திருவாரூா், உதகை, சங்ககிரி, கிருஷ்ணகிரி ரூ.120

சேலம் ரூ.100-ரூ.120

ஒட்டன்சத்திரம் ரூ.115

ஈரோடு ரூ.110

மயிலாடுதுறை 1 கிலோ - ரூ. 100

வேலூா், மதுரை , ராணிப்பேட்டை ரூ.70 முதல் ரூ.100 வரை

திருவள்ளூா், நாகப்பட்டினம், விருதுநகா், நாமக்கல் ரூ. 90

சிவகங்கை, தருமபுரி, ஒசூா் ரூ. 80.

காஞ்சிபுரம் ரூ.80-ரூ.100

தேனி, திண்டுக்கல் ரூ. 70

பெங்களூரு ரூ.120.

Tags : தக்காளி Tomato Andhra வேளாண் துறை Price hike
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT