தமிழ்நாடு

அச்சமூட்டும் கனமழை செய்திகள்: வானிலை ஆய்வு மையம் விளக்கம்

23rd Nov 2021 12:37 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதனால் மீண்டும் கனமழை பெய்யும் என்று பரவலாக கனமழை தொடர்பான அச்சமூட்டும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு என்ன தெரிவிக்கிறது என்று பார்க்கலாம்.

தெற்கு வங்கக் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதுமேலும் மேற்கு வட மேற்கு திசையில் வரும் நாள்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும். 

இதையும் படிக்கலாமே.. இன்று மிக உகந்த நாள்: எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

ADVERTISEMENT

இதன் காரணமாக, இன்று, தமிழகத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

நவ. 24ஆம் தேதி நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நவ. 25ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.

சென்னை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

நவ. 26, 27ஆம் தேதிகளில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை..
அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
 

Tags : chennai rain rain update heavy rain கனமழை மழை நிலவரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT