தமிழ்நாடு

புதுச்சேரியில் மத்தியக் குழுவுடன் வந்த வேளாண் துறை இயக்குநரை விரட்டிய விவசாயிகள்

23rd Nov 2021 12:07 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடி பகுதியில் காலை எட்டு முப்பது மணிக்கு ஆய்வுப் பணியை தொடங்கிய இக்குழுவினர், தொடர்ந்து தவளகுப்பம் என்.ஆர். நகரில் மழைபெய்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பொதுமக்களிடம் சேதங்கள் குறித்து கலந்துரையாடினர்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடி கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் மத்திய குழு ஆய்வு

 இதனையடுத்து பாகூர் பகுதியில் மழை வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. இன்று மிக உகந்த நாள்: எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

பாகூர் பகுதியில் ஆய்வுக்குச் சென்ற போது, அவர்களுடன் புதுச்சேரி வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி வந்தார். அவரை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரட்டினர். புதுவையில் விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு தொடர்பான திட்டக் கோப்புகளில் கையொப்பமிடாமல் திருப்பி அனுப்புவது, மழை பெய்து பல நாள்களாகியும் பார்வையிட வராதது, தற்போது மத்தியக் குழு வந்தவுடன் பெயருக்கு என்று ஆய்வுக்கு வருவது உள்ளிட்ட காரணங்களால் அவரை உள்ளே வரக்கூடாது எனக் கூறி விவசாயிகள் விரட்டினர்.  அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

இதனையடுத்து முள்ளோடை பகுதியில் மழையால் மின் சாதனங்கள் பழுதடைந்த இடங்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். புதுச்சேரியில் மழை, வெள்ள சேத புள்ளிவிவரங்களை சேகரித்துக்கொண்ட குழுவினர், காலை 10.30 மணிக்கு ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு புதுச்சேரியிலிருந்து கடலூருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
 

Tags : agriculture புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT