தமிழ்நாடு

சென்னை ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை அகற்றும் பணி தீவிரம்

23rd Nov 2021 09:50 AM

ADVERTISEMENT

 

சென்னை ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த வாரம் முதலே பலத்த மழை பெய்து வருகிறது. 

இதையும் படிக்கலாமே.. இன்று மிக உகந்த நாள்: எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

ADVERTISEMENT

சென்னையைப் பொருத்தவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா்.

தாழ்வானப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகள் சிதிலமடைந்தன. 

சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் புகுந்துபோக்கு போக்குவரத்தும் முடங்கியது. இந்த நிலையில், சென்னை ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைப் பகுதியில் சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அஜிஸ் நகர், பிரதான சாலை, சுப்பிரமணிய தோட்ட தெரு, கோடம்பாக்கம் ரயில்வே பாடசாலை ஆகிய பகுதிகளிலும் மழை நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

Tags : chennai rain update chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT