தமிழ்நாடு

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை: அமைச்சர் விளக்கம்

23rd Nov 2021 06:55 PM

ADVERTISEMENT

 

10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எனவும், வினாத்தாள்கள் வடிவமைப்பில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாது என்றும் தெரிவித்தார். 

படிக்கஆப்பிள் விலையில் தக்காளியா?: மக்கள் அதிர்ச்சி -வைரலாகும் புகைப்படம்

ADVERTISEMENT

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை.

தற்போதய நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமரவைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

படிக்கநாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

இந்த ஆண்டு 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 8.75 லட்சத்துக்கு மேல் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். 

Tags : School Education department anbil magesh education minister
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT