தமிழ்நாடு

24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

23rd Nov 2021 08:57 AM

ADVERTISEMENT

 

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது, மேற்கு-வட மேற்கு திசையில் நகா்ந்து, இலங்கை-தென்தமிழகம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. இன்று மிக உகந்த நாள்: எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் ஏற்கெனவே இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அடுத்தடுத்து உருவாகி வலுவடைந்து, சென்னைக்கு அருகே கரையை கடந்து சென்றன. இதன்காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை - தென் தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நவம்பர் 25, 26, 27 ஆகிய நாள்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : depression bay of bengal IMD
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT