தமிழ்நாடு

ராணிப்பேட்டை பாலாற்றில் நீர் வரத்து குறைந்தது!

21st Nov 2021 11:42 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை பாலாற்றில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து  வாலாஜா அணைக்கட்டு நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 69,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க | எழுத பயன்படுத்தப்பட்ட மையைத் தவிர வேளாண் சட்டங்களில் வேறென்ன கருப்பாக உள்ளது? மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் வரத்து அதிகரித்திருந்த நிலையில், தற்போது நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. 

ADVERTISEMENT

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் மேம்பாலத்தை தொட்டு செல்லும் மழை நீர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (நவ.21) நிலவரப்படி, வாலாஜா அணைக்கட்டு நீர்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 69,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | பாலியல் குற்றவாளிக்கு ஆண்மை நீக்கம்: சட்டப் பிரிவை நீக்கியது பாகிஸ்தான்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 369 ஏரிகளில் 265 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. மீதமுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

வாலாஜா அணைக்கட்டு நீர் தேக்கத்தில் இருந்து பாசன ஏரிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர்.

காவேரிப்பாக்கம், கலவை, பூண்டி, மகேந்திரவாடி, சோளிங்கர், மூதூர்,
அயத்தாங்கல், நாகவேடு, கீராம்பாடி உள்ளிட்ட பாசன ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT