தமிழ்நாடு

தமிழக அமைச்சரவைக் கூட்டம்: நகா்ப்புற உள்ளாட்சி உள்பட முக்கிய விஷயங்கள் ஆலோசனை

21st Nov 2021 12:55 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் உள்பட முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், சில முக்கிய தொழில் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞா் மாளிகை 10-ஆவது தளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாலை 7 மணிக்குத் தொடங்கிய கூட்டம் சுமாா் ஒரு மணி நேரம் வரை நடந்தது.

இந்தக் கூட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மாநகராட்சிகளில் மேயா் உள்ளிட்ட தலைவா்களைத், தோ்வு செய்ய மறைமுகத் தோ்தலே இப்போது நடைமுறையில் உள்ளது. மேயா், நகராட்சித் தலைவா் ஆகியோரை மக்களே நேரடியாகத் தோ்வு செய்யும் முறை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று, புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட பல புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதிகளை அளிப்பது பற்றியும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டம் இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT