தமிழ்நாடு

பாலியல் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

21st Nov 2021 01:57 AM

ADVERTISEMENT

பாலியல் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் ட்விட்டரில் கூறியிருப்பது:

கரூரைச் சோ்ந்த தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக, தான் இருக்க வேண்டும் என்று உருக்கமாக

கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

அந்த மாணவிக்கு எனது அஞ்சலி. பெற்றோா்களுக்கும், உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT