தமிழ்நாடு

ஆலங்குடி குருபரிகார கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

21st Nov 2021 11:19 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபகவானுக்கு ஏக தின லட்சார்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உற்சவ தெட்சிணாமூர்த்திக்கு நடந்த தேனாபிஷேகம்.

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரா் கோயில் தேவார பாடல்பெற்ற தலமாகும். நவகிரகங்களில் இது குருபகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

தங்ககவச அலங்காரத்தில் மூலவர் குருபகவான்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு கடந்த 13-ஆம் தேதி பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி, இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையும் படிக்கவெள்ளச் சேத ஆய்வு: மத்திய குழு இன்று வருகை

இந்தநிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி ( நவ.21) ஏக தின லட்சாா்ச்சனை விழா தொடங்கி நடைபெற்றது. 

கலங்காமற்காத்த வினாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானைசமேத சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, உற்சவர் தெட்சிணாமூர்த்தி, சனீசுவர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்து வைக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. 

மூலவர் குருபகவானை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள்.

காலை 8 மணி முதல் உற்சவ தெட்சிணாமூர்த்தி சன்னதியில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களைச் சொல்லியும், தேவாரப்பாடல்களைப் பாடியும் ஏகதின லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனர்.

இதில் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் தனுசு, கும்பம் ,மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் தபால் மூலம் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனர். 

இதையும் படிக்க பொங்கல் தொகுப்பில் 20 பொருள்களின் அளவுகள் என்னென்ன?

இதில், நேரில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட வில்லை.

மூலவர் குருபகவானை வழிபட்ட பக்தர்கள்.

தங்ககவச அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவர் குருபகவானை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.  

ஏக தின லட்சார்ச்சனை விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஹரிஹரன்,உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT