தமிழ்நாடு

கம்பம் அரசு மருத்துவருக்கு சிறந்த சேவைக்கான விருது

21st Nov 2021 03:43 PM

ADVERTISEMENT

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் எம்.மகேஷ் பாண்டியனுக்கு இந்திய மருத்துவக் கழகம் சார்பில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக் கழகம் ஆண்டு தோறும் மருத்துவத்துறையில் 40 வயதுக்குட்பட்டோருக்கான சிறந்த சேவைக்காக டாக்டர் கேதன் தேசாய் யுவா தலைவர் விருது வழங்கப்படுகிறது.

இந்தாண்டு யுவா லீடர் விருது வழங்கும் விழா கடந்த 14.11.2021 அன்று தில்லியில் நடைபெற்றது, இதில் கம்பம் அரசு மருத்துமனை மருத்துவர் எம்.மகேஷ் பாண்டியனுக்கு டாக்டர்.கேதன் தேசாய் யுவா லீடர் விருதை தலைவர் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

தென்னிந்தியாவிலேயே இவர் ஒருவருக்குத்தான் இந்த விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கம்பம் அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் ஜெ.பொன்னரசன், மருத்துவர்கள், ஐ.எம்.ஏ. முல்லைப்பெரியாறு கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT