தமிழ்நாடு

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: விவசாயிகள் அறிவிப்பு

21st Nov 2021 02:30 PM

ADVERTISEMENT

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என தில்லி எல்லைப்பகுதிகளில் போராடிவரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தில்லி ஹரியாணா எல்லை பகுதியான சிங்குவில் போராட்டம் நடத்திவரும் விவசாயி பல்பீர் சிங் ராஜேவால் கூறுகையில், "விவசாயச் சட்டங்களை ரத்து செய்வது குறித்து விவாதித்துள்ளோம். இதைத் தொடர்ந்து, சில முடிவுகள் எடுக்கப்பட்டன. சம்யுக்தா கிசான் மோர்ச்சா, வகுத்து திட்டங்களை அப்படியே மேற்கொள்ளும்.

நவம்பர் 22 அன்று லக்னோவில் விவசாயிகள் கூட்டம், நவம்பர் 26 அன்று அனைத்து எல்லைகளிலும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, நவம்பர் 29 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி ஆகியவை திட்டமிட்டபடி நடத்தப்படும். தங்களின் கோரிக்கைகளை திறந்த கடிதமாக பிரதமர் மோடிக்கு அனுப்புவோம்" என்றார்.

ADVERTISEMENT

இந்த மாத இறுதியில் தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில்தான், சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்படவுள்ளது. 

முன்னதாக இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, "நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் போது, ​​என் அர்ப்பணிப்பில் ஏதோ குறை இருந்திருக்கலாம் என்று நான் நேர்மையான மற்றும் தூய்மையான மனதுடன் சொல்ல விரும்புகிறேன். நம் விவசாய சகோதரர்கள் சிலருக்கு சூரியனின் ஒளியைப் போல உண்மையை விளக்க முடியவில்லை. 

இதையும் படிக்க | ''எங்களுடன் துணை நின்றதற்கு நன்றி'': 'ஜெய் பீம்' படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து சூர்யா நெகிழ்ச்சி

ஆனால் இன்று யாரையும் குறை சொல்லும் நேரமல்ல. இன்று, மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் என்பதை நான் நாட்டுக்கு கூற விரும்புகிறேன்" என்றார்.

பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT