தமிழ்நாடு

தொடர் மழையால் எடப்பாடி பெரிய ஏரி நிரம்பியது!

21st Nov 2021 11:04 AM

ADVERTISEMENT


எடப்பாடி: அண்மையில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்த தொடர் கனமழையால், சரபங்கா நதியின் வடிகால் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்து வருகின்றன. 

சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரிலிருந்து உருவாகும் சரபங்கா நதி டேனிஸ்பேட்டை, ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி மற்றும் எடப்பாடி வழியாக பாய்தோடி காவிரியில் கலந்து வருகிறது.

  நிரம்பி வழியும் எடப்பாடி பெரிய ஏரி

ADVERTISEMENT

சரபங்கா நதியின் வடிநிலப்பகுதியில் 20க்கும் மேற்ப்பட்ட ஏரிகள் உள்ளன. ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளாலும் சரபங்கா நதிக்கரையில் பல்வேறு இடங்களில் பெருமளவில் மணல் அள்ளப்பட்டதாலும் இந்நீர்வழிப்பாதையில் தடைகள் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக நீடிப்பு

இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சரபங்கா நதி மற்றும் அதன் வடிநிலப்பகுதியில் உள்ள ஏரிகள் நீர் இன்றி வறண்டு இருந்தன.

இந்நிலையில், அண்மையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் பெய்த தொடர்கனமழையால் நீண்ட ஆண்டுகளுக்கு பின் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சரபங்கா நதியின் வடிநிலப் நிலப்பகுதியில் உள்ள வெள்ளாளபுரம் ஏரி அண்மையில் நிரம்பியது.

ஏரியில் இருந்த தெடர்ந்து வெளியேரி வரும் உபரிநீர் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தது. இதனை அடுத்து அப்பகுதி மக்களை மீட்ட
வருவாய்த்துறையினர் அருகில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்கவைத்துள்ளனர். 

அங்கிருந்து வெளியோரும் உபரிநீரால் தற்போது எடப்பாடி அடுத்த ஆவணிப்பேரூர் கீழ்முகம் பகுதியில் உள்ள கொன்டையம்பாளைம் ஏரி முழுவதும் நிரம்பி வழிந்து வருகிறது. 

இதையும் படிக்க | மாசிநாயக்கன்பட்டியில் கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு

தொடர்ந்து அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், சரபங்காநதி வழியாக எடப்பாடி பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நிரம்பிவருகிறது. 

சுமார் 480 ஏக்கர் பரப்பளவுகொண்ட எடப்பாடி பெரிய ஏரி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நிரம்பி வழிய தொடங்கியது. 

தொடர்ந்து இப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பிவருவதால் தாதாபுரம்,
புதுப்பாளைம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வருவாய்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்திடும் காட்சியினை காண இப்பகுதி மக்கள் ஆர்வமுடன் திரண்டு வருகின்றனர். 

தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் இப்பகுதியில் கூடுதல் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT