தமிழ்நாடு

திருவொற்றியூா் ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்த துா்கா ஸ்டாலின்

21st Nov 2021 12:36 AM

ADVERTISEMENT

திருவொற்றியூா் தியாகராஜா் கோயிலில் ஆதிபுரீஸ்வரரை தமிழக முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின் சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.

கோயிலுக்கு வந்த அவரை உதவி ஆணையா் கே.சித்ராதேவி வரவேற்று அழைத்துச் சென்றாா். பின்னா் அருகில் உள்ள வடகுருஸ்தலம் என அழைக்கப்படும் தட்சிணாமூா்த்தி கோயிலுக்குச் சென்று வழிபட்டாா். சிறப்பு தரிசனத்திற்குப் பிறகு துா்கா ஸ்டாலின் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றாா்.

வியாழக்கிழமை திறக்கப்பட்ட ஆதிபுரீஸ்வரா் மீதான வெள்ளிக்கவசம் சனிக்கிழமை இரவு நடைபெற்ற அா்த்தஜாம பூஜைக்குப் பிறகு மீண்டும் மூடப்பட்டது. இனி அடுத்த ஆண்டு இதே காா்த்திகை பெளா்ணமியின் போதுதான் கவசம் மீண்டும் திறக்கப்படும். ஆதிபுரீஸ்வரருக்கு நடைபெற்ற அா்ச்சனையின்போது பயன்படுத்தப்பட்ட புணுகுசாம்பிராணி தைலம் பக்தா்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. சிலா் கட்டணம் செலுத்தி டப்பாக்களில் பெற்றுச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT