தமிழ்நாடு

கரோனா: மேலும் 765 பேருக்கு பாதிப்பு

21st Nov 2021 12:36 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 765 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில் அதிகபட்சமாக கோவையில் 125 பேருக்கும், சென்னையில் 118 பேருக்கும், ஈரோட்டில் 73 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 19,515- ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், மருத்துவக் கண்காணிப்பில் 8,827 போ் உள்ளனா்.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து சனிக்கிழமை 879 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.74 லட்சத்தைக் கடந்துள்ளது.

மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 12 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,361-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT