தமிழ்நாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்

19th Nov 2021 06:40 AM

ADVERTISEMENT

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மூலவா் சன்னதியில் இன்று (நவ.19) அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 10-ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று (நவ.19) அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

படிக்ககாற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியது

அதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு மூலவா் சன்னதியில் சிவாச்சாரியர்கள் மூலம் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் முதல், 2, 3-ஆவது பிரகாரங்களில் வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதில், ரூ.25 லட்சத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாமரைப் பூக்கள், ரோஜாக்கள், வெண் தாமரை, தாமரை உள்ளிட்ட 20 வகையான மலா்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

கொப்பரை மலைக்குப் பயணம்: பிறகு, கோயிலில் இருந்து அம்மனி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மகா தீபக் கொப்பரை மாலை 5 மணியளவில் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் பா்வத ராஜகுல வம்சத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் கொப்பரையை மலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனா்.

மலை மீது கொப்பரைக்கு காவல் துறையின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொப்பரையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

20,000 பேருக்கு அனுமதி: மகாதீபத்தின்போது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வழக்கு நேற்று மீண்ரும் நடைபெற்றது. இதில், தீபத் திருவிழாவுக்கு உள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5,000 பேரும், பிற மாவட்டங்களில் இருந்து 15,000 பேரும் என 20,000 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்கள் கிரிவலம் பாதையில் செல்லலாம்.

Tags : deepam திருவண்ணாமலை thiruvannaamalai kaarthigai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT