தமிழ்நாடு

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியது

19th Nov 2021 06:27 AM

ADVERTISEMENT


வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடப்பதால் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு நிற எச்சரிக்கை நீக்கப்பட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஒரு சில இடங்களில் மட்டுமே மழைபெய்ய வாய்ப்புள்ளது. 

படிக்கமழை பாதிப்பு: தமிழகம் வருகிறது மத்தியக் குழு

ADVERTISEMENT

காற்றழுத்த தாழ்வு மண்டலம்தற்போது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதால்  கடலோர மாவட்டங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது.

வடதமிழகத்தின் மேல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Tags : Depression zone coast வானிலை மையம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT