மேட்டூர் அணை நீர்வரத்து 20,653கன அடியாக குறைந்தது. புதன்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 119அடியாக நீடித்து வருகிறது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும்மழை குறைந்ததன் காரணமாக செவ்வாய் கிழமை காலை வினாடிக்கு 26,440 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 21,027கன அடியாகவும் மாலையில் 20,653 குறைந்துள்ளது.
படிக்க | சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை - முழு விவரம்
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் 20, 263 கன அடியாக உள்ளது.. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 150கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 91.88டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுவதால் இன்று இரண்டாவது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக நீடித்து வருகிறது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டால் மேட்டூர் அணை 120 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.