தமிழ்நாடு

கனமழை வெள்ளம்: கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பை பார்வையிட்ட ஆணையர்

10th Nov 2021 08:42 PM

ADVERTISEMENT

 

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, G-3 கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் பின்புறமுள்ள, கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு அதிகாரிகளுடன் இன்று (நவ.10) சென்று, அங்குள்ள காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் குடியிருப்புகளை பார்வையிட்டார்.

அங்கு வெள்ளநீரை வெளியேற்ற உத்தரவிட்டதன்பேரில், மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிட்டு,
காவல் குடும்பத்தினரிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து காவலர் குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்கள், ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் மற்றும் விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT