தமிழ்நாடு

'காற்றழுத்தத் தாழ்வு 6 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும்': கடலூரில் நாளை கரையை கடக்கும்

10th Nov 2021 05:02 PM

ADVERTISEMENT


தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11-ஆம் தேதி காலை தமிழக கடற்கரை பகுதியை வந்தடையும் எனவும் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. 

படிக்ககடலூர் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்கும்

ADVERTISEMENT

இந்நிலையில், தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மாலை வடகடலோர பகுதியான கடலூர் அருகே காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிஹோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நாளை (நவ.11) சென்னை, திருவள்ளூர்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழை பெய்யும்.

படிக்க அதி கனமழை எச்சரிக்கை: எவையெல்லாம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்?

ஓரிரு இடங்களில்‌ அதி கன மழையும்‌, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கனமழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி, காரைக்கால்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT