தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் ஏடிஜிபி நேரில் ஆய்வு

10th Nov 2021 04:10 PM

ADVERTISEMENT

சீர்காழி: வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி உள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக தீவிரமடைந்து சீர்காழி வட்டாரத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் இன்னும் மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விதிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் வருவாய்த் துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளவும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் ஆற்றின் வலது கரை உடைந்து  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டதும் அதன்பின்னர் அளகுடியில் கொள்ளிடம் ஆற்றின் கரை பாறாங்கற்கள் கொட்டப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடர் மழையினால் மேட்டூரில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றின் கரைகள் வலுவாக உள்ளதா  என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தஞ்சை  சரக வடகிழக்கு பருவ மழை கண்காணிப்பு அலுவலரும் ஏடிஜிபியுமான மகேஷ்குமார் அகர்வால் அளக்குடி பகுதிக்கு நேரில் வந்து கரைகளின் தன்மை குறித்தும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தஞ்சையை சரக டிஐஜி பிரவேஷ்குமார், மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி சுகுணா சிங், சீர்காழி டிஎஸ்பி லாமெக், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT