தமிழ்நாடு

உசிலை அருகே 58 கிராம பாசன கால்வாய்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

10th Nov 2021 02:07 PM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே 58 கிராம பாசன கால்வாயை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் உத்தப்பநாயக்கனூர் அருகே உள்ள கிளை கால்வாய் பாலத்தை ஆய்வு செய்தார். 
இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள்செயற்பொறியாளர் அன்புசெழியன், உதவி செயற்பொறியாளர் நீலாவதி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம், வட்டாட்சியர் விஜயலட்சுமி, மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க | பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: 5,558 கன அடி உபரி நீர் திறப்பு

ADVERTISEMENT

கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்: 
உசிலம்பட்டி  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி. ஐயப்பன் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மனு கொடுத்தனர். 

உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 58 கிராம கால்வாய் திட்டப்பணிகள் கடந்த அம்மா அரசால் பணிகள் நிறைவு பெற்று, சோதனை ஓட்டமாக மூன்று முறை தண்ணீர் திறந்து விடப்பட்டு பாசன கண்மாயிகளும் , குளங்களும் ஓரளவுக்கு தண்ணீர் நிரப்பபட்டு , நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரம் ஓரளவுக்கு போதுமானதாக இருந்தது. 

இந்நிலையில் கடந்த முறை கழக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக அணையில் 67 அடி தண்ணீர் இருந்த பொழுது திறந்து விட கோரிக்கை வைத்தோம் . தண்ணீர் திறக்கப்பட வில்லை. தற்பொழுதும் அணையில் 69 அடி தண்ணீர் உள்ளது . 

இதையும் படிக்க | வேலை வேண்டுமா...? இஸ்ரோவில் மொழிப்பெயர்பாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்நிலையில் 58 திட்ட கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் கரோனா பெரும் தொற்று முடக்கத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாய பெரும் மக்களுக்கு உதவியாக இருக்கும். 

தற்பொழுது ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையும் நிவர்த்தி அடையும், மேலும் தற்பொழுது அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் விடப்படுகிறது. தற்பொழுது முடிவடைந்துள்ள தென்மேற்கு பருவமழையும் 58 கிராம பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை.

மேலும் தற்பொழுது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையும் மேற்படி பகுதிகளில் நாளது தேதிவரை போதுமான மழை பொழிவு இல்லாத காரணத்தினால் 58 கிராம திட்ட பாசனத்திற்கு உட்பட்ட நீர்பிடிப்பு கண்மாயிகள், குளங்கள் வரண்டு போய் உள்ளது . ஆதலாலமேற்படி உபரி நீரை 58 கிராம கால்வாயில் திறந்து உதவிடுமாறு கோரிக்கை  மனு அளித்தனர்.

இதில், நகரச் செயலாளர் பூமாரராஜா, அம்மா பேரவை மாநிலத் துணைச் செயலாளர் தனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT