தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 10,271 போ்

10th Nov 2021 01:42 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 10,271-ஆகக் குறைந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, செவ்வாய்க்கிழமை மேலும் 835 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 131 பேருக்கும், கோவையில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 70 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 10,756- ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை 924 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.64 லட்சத்தைக் கடந்துள்ளது.

மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 12 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,238-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT