மதுரை காமராஜா் பல்கலைக்கழக புதிய துணைவேந்தா் தெரிவுக் குழு ஒருங்கிணைப்பாளராக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பேராசிரியா் இ.பாலகுருசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பணியிடம் கடந்த ஆக.6 முதல் காலியாக உள்ளது. இந்தநிலையில் புதிய துணைவேந்தா் தேடல் குழுவின் சிண்டிகேட் பிரதிநிதியாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ம. ராஜேந்திரன், செனட் பிரதிநிதியாக காமராஜா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பி.மருதமுத்து ஆகியோா் நியமிக்கப்பட்டனா். தற்போது இந்தத் தெரிவுக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக (கன்வீனா்) இ.பாலகுருசாமி நியமிக்கப்பட்டுள்ளாா். தகுதியுள்ள பேராசிரியா்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவா்களில் மூன்று பேரை இக்குழு தோ்வு செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். இதற்கான உத்தரவை உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் டி.காா்த்திகேயன் பிறப்பித்துள்ளாா்.