தமிழ்நாடு

கோயில்களில் 10,000 பணியாளா்கள் நியமனம்: பணிகளை தீவிரப்படுத்தும் அறநிலையத்துறை

10th Nov 2021 02:15 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் திருக்கோயில்களில் 10,000 பாதுகாப்புப் பணியாளா்களை நியமனம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்போது திருக்கோயில்களின் பாதுகாப்புக்காக 10,000 பாதுகாப்புப் பணியாளா்கள் நியமனம் செய்யப்படுவாா்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடா்ந்து முதுநிலை திருக்கோயில்களான மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரா் திருக்கோயில், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மயிலாப்பூா் அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயில் உள்பட 47 திருக்கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோயில் வாரியாக எத்தனை பாதுகாப்புப் பணியாளா்கள் பாதுகாப்புக்குத் தேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

முதுநிலை அல்லாத திருக்கோயில்களான மன்னாா்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், திருச்சி சிறுவாச்சூா் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், பண்பொழில் அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதா் திருக்கோயில், கடலூா் மாவட்டம் மணவாளநல்லூா் அருள்மிகு கொளஞ்சியப்பா் திருக்கோயில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரா் வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில் உள்பட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பாதுகாப்புப் பணியாளா்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் திருக்கோயில் அதிகாரிகள் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்தவுடன் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேவையான பணியாளா்கள் நியமிக்கப்படுவா் என இந்து சமய அறநிலையத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT