தமிழ்நாடு

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்வு: 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

9th Nov 2021 10:34 AM

ADVERTISEMENT

 

வைகை அணை நீர்மட்டம் செவ்வாய்கிழமை 68.50 அடியாக உயர்ந்துள்ள நிலையில், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சார்பில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீரால் மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம், 68.50 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சார்பில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. 6 ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டும் மாமண்டூர் பாசன ஏரி; விவசாயிகள் மகிழ்ச்சி

ADVERTISEMENT

தற்போது அணைக்கு  விநாடிக்கு 2,884 கன அடி வீதம்  தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. அணையிலிருந்து விநாடிக்கு 569 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 5,421 மில்லியன் கன அடி.

வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததும், 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக வைகை ஆற்றில் திறந்து விடப்படும். நிகழாண்டில் 3-வது முறையாக வைகை அணை நீர் மட்டம் 69  அடியை எட்டி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT