சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
செப்டம்பர் 16-ஆம் தேதி எடுத்த முடிவின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் இந்த பரிந்துரையை அளித்துள்ளது.
மேலும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கடந்த ஜனவரி 4-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 50-வது தலைமை நீதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
இவர் இதற்கு முன்பு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் 2-வது மூத்த நீதிபதியாகவும் இருந்தவர்.