முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முதல்வர் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தனது கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ரமணா நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கினார். பின்னர் அங்குள்ள மக்களுடன் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு