தமிழ்நாடு

திருவள்ளூர் பகுதிகளில் தொடர் மழையால் நிரம்பும் ஏரிகள்: இதுவரை 127 ஏரிகள் நிரம்பின

9th Nov 2021 12:40 PM

ADVERTISEMENT


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் இதுவரையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 127 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 450 குளங்களும் முழு அளவில் நிரம்பியன.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக விடாமல் பெய்து வரும் மழையால் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொசஸ்தலை ஆற்றுவரத்தில் மொத்தம் 336 ஏரிகள் உள்ளன. இதில் 65 ஏரிகள் முழு அளவில் நிரம்பியுள்ளன. இதேபோல் 37 ஏரிகளுக்கு 76 சதவீதமும், 50 ஏரிகளுக்கு 60 சதவீதமும், 107 ஏரிகளுக்கு 50 சதவீதமும், 79 ஏரிகளுக்கு 25 சதவீதம் வரையில் நிரம்பியுள்ளன. 

இதையும் படிக்கலாமே.. 6 ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டும் மாமண்டூர் பாசன ஏரி; விவசாயிகள் மகிழ்ச்சி

அதேபோல் இந்த மாவட்டத்தில் ஆரணி ஆற்றின் நீர்வரத்து கட்டுப்பாட்டில் 250 ஏரிகள் உள்ளன. இதில் 62 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின. மேலும் 12 ஏரிகளுக்கு 75 சதவீதமும், 35 ஏரிகளுக்கு 50 சதவீதமும், 77 ஏரிகளுக்கு 40 சதவீதமும், மீதமுள்ள 73 ஏரிகளுக்கு 25 சதவீதம் அளவில் நிரம்பின. இதைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் 14 ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் சிறிய மற்றும் பெரிய அளவிலான 3296 குளங்கள் உள்ளது. இதில் 450 குளங்களில் 100 சதவீதமும், 886 குளங்களில் 75 சதவீதமும், 1363 குளங்கள் 50 சதவீதமும், 606 குளங்கள் 25 சதவீதம் வரையில் நிரம்பியுள்ளன. அதனால், உபரி நீர் வெளியேற்றம் மற்றும் உடைப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தோர் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிரம்பும் நிலையில் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து கலங்கல் வழியாக வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.    

மழை அளவு: இந்த மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரையில் பதிவான மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு: செங்குன்றம்-39, சோழவரம்-31, பூந்தமல்லி-28,   திருத்தணி, கும்மிடிப்பூண்டி தலா-19, பொன்னேரி-17, தாமரைபாக்கம்-14, பள்ளிப்பட்டு-13, திருவள்ளூர்,   ஆர்.கே.பேட்டை தலா-12, ஜமீன்கொரட்டூர்-11, பூண்டி-8, ஊத்துக்கோட்டை-6 என மொத்தம் 236 மி.மீட்டரும், சராசரியாக 16.90 ஆகவும் மழை அளவு பதிவு செய்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT