தமிழ்நாடு

அதி கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

9th Nov 2021 05:08 PM

ADVERTISEMENT

தமிழகத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 6 மாவட்டங்களில் ஆட்சியர்களுடன் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதியில்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 11 ஆம் தேதி வட தமிழக கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க | தமிழகத்தில் 3 நாள்களுக்கு அதி கனமழை தொடரும்: வானிலை மையம்

இதையடுத்து, டெல்டா மாவட்டங்கள் உள்பட 6 மாவட்டங்களில் ஆட்சியர்களுடன் இன்று மாலை காணொலி மூலம் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையின்போது மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், மழைக்கு பிறகு செய்யவேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

ADVERTISEMENT

ஏற்கனவே, கடந்த 3 நாள்களாக சென்னையில் பெய்த கனமழையால் வெள்ள நீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT