தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

9th Nov 2021 10:50 AM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் இது குறித்த எச்சரிக்கைத் தகவலை தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது சுட்டுரைப் பக்கத்தில்  வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்கதமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் அதிகனமழைக்கு வாய்ப்பு: 'ரெட் அலர்ட்'

அதில் கூறப்பட்டிருப்பதாவது, நவம்பர் 9ஆம் தேதி காலை 9.50 மணிமுதல் 3 மணிநேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT