தமிழ்நாடு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

9th Nov 2021 12:15 PM

ADVERTISEMENT


சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, இன்று பகல் 12 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்றும், நவம்பர் 11ஆம் தேதி இது தமிழக கரையை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை தொடரும்..

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னையில் கனமழை தொடரும் என்றும், டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு அதிகனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT