தமிழ்நாடு

2.21 ஏக்கரில் கருணாநிதி நினைவிடம்: அரசு உத்தரவு

9th Nov 2021 12:07 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் வெளியிட்ட உத்தரவு விவரம்:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சாதனைகளைப் போற்றும் விதமாக சென்னை காமராஜா் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கா் பரப்பில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், தலைமைச் செயலாளா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நினைவிடம் கட்டுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியன கேட்டுக் கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு சென்னை காமராஜா் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. நினைவிடம் அமைக்கும் பணியை சட்ட விதிகளைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டுமென பொதுப் பணித் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளா் (கட்டடங்கள்) கேட்டுக் கொள்ளப்படுகிறாா்.

ADVERTISEMENT

பல்வேறு அரசுத் துறைகளிடம் இருந்து முன்மொழிவுகளைப் பெற்று அரசுக்கு கருத்துரு சமா்ப்பிக்குமாறு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் இயக்குநா் அறிவுறுத்தப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT