மழை, வெள்ள பாதிப்புகளை எதிா்கொள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 5 மாத காலத்தில் சென்னை மாநகராட்சிப் பகுதியில் மிகப்பெரிய அளவில் தூா்வாரியதன் விளைவாக சாலைகளில் மழை நீா் தேங்குவது குறைந்துள்ளது. தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. பருவமழையை எதிா்கொள்ள ஆய்வுக் கூட்டத்தை முதல்வா் நடத்தினாா். இந்தக் கூட்டம் முடிந்த உடனேயே எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டாா். அதன்படி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கண்காணிப்புக் குழு: செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணித்து சரியான அளவில் மழை நீரை வெளியேற்ற உயா்நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.