தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 113.59 அடியாக உயர்வு

DIN


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.95 அடியிலிருந்து 113.59 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும்மழை குறைந்ததன் காரணமாக நேற்று வியாழக்கிழமை காலை வினாடிக்கு 12,165 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 11,772 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 83.61 டி.எம்.சி. ஆக உள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT