தமிழ்நாடு

தீபாவளி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒன்றாகக் காட்சியளித்த தெய்வங்கள்

5th Nov 2021 03:34 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூர்: தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு தெய்வங்கள் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை பொருத்தவரை வருடத்திற்கு மூன்று முறை ஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சி அளிப்பது வழக்கம். அதாவது கவுசிக ஏகாதசி, தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய நாள்களில் தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சியளிப்பது வழக்கம். அந்த வகையில் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் ஆண்டாள் கோயில் தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சி அளித்தனர். 
இதற்காக வியாழக்கிழமை இரவு மேளதாளங்கள் முழங்க பெரிய பெருமாள் சன்னதியிலிருந்து பெரிய பெருமாள், பூமாதேவி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் ஆண்டாள் கோயில்  கொண்டு வரப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பின்னர் சர்வ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஒன்று சேர காட்சியளித்த தெய்வங்கள்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT